நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக நிற்போம்: டி.டி.வி. தினகரன்..!
We will all stand in support of our soldiers are engaged in the task of protecting the country and its people TTV Dinakaran
ஜம்மு- காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை தொடந்து எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம் அடைந்துள்ளார். இந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், குறிப்பிட்டுள்ளதாவது:-
'ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தொடர் தாக்குதலில், அங்கு மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் அவர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
முரளி நாயக் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக ராணுவத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக நிற்போம்.' என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
We will all stand in support of our soldiers are engaged in the task of protecting the country and its people TTV Dinakaran