பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வங்கி சேவைகள் கிடைக்கவேண்டும்: நிர்மலா சீதாராமன் உத்தரவு..!
Banking services should be available to the general public without any disruption Nirmala Sitharaman orders
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வங்கிச் சேவைகள் பொது மக்களுக்கு எந்த இடையூறும் இன்றி கிடைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், எந்த எதிர்பாராத சூழ்நிலையையும் எதிர்கொள்ள அனைத்து வங்கிகளும் தயாராக வேண்டும் என்றும், இதற்காக அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், பொது மக்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு வங்கி மற்றும் நிதிச் சேவையில் எந்த இடையூறும் ஏற்படாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மக்களுக்கு நேரடியாக வங்கி சேவையும், டிஜிட்டல் சேவைகளும் கிடைக்க செய்வதுடன், ஏடிஎம்.,களில் போதியளவு பணம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். யுபிஐ மற்றும் இணையதள சேவைகள் தங்கு தடையின்றி தொடர நடவடிக்கை தேவை என்றும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தேவையான நடவடிக்கைகளையும் செய்வது குறித்து ஒத்திகை செய்து பார்க்க வேண்டும் எனவும் நிதியமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் எல்லையோரங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த நிர்மலா சீதாராமன், அதற்கு வங்கித்துறை அதிகாரிகள் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Banking services should be available to the general public without any disruption Nirmala Sitharaman orders