கல்கி 2898 பாகம் 2: தீபிகா படுகோன் ஒத்துழைப்பு இல்லாததால் அதிர்ச்சி மாற்றம்! - Seithipunal
Seithipunal


'கல்கி 2898 ஏடி' திரைப்படம், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் ஆகிய பிரபல நடிகர்கள் நடித்து, கடந்த ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான இப்படத்தின் கதை, மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்த 6000 வருடங்களுக்கு பிறகு நிகழ்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இத்திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் வசூலில் அசத்தியது.

இதுவரை உலகம் முழுவதும் ரூ.1100 கோடி வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும், 2 -ம் பாகம் வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதில் கமல்ஹாசனின் ‘யாஸ்கின்’ கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி – கல்கி 2898 பாகம் 2-ல் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார்.

படக்குழுவின் விளக்கப்படி, "தீபிகாவின் ஒத்துழைப்பு தேவையான அளவில் இல்லாததால் இது ஒரு கவனத்துடன் எடுத்த முடிவாகும். கல்கி போன்ற படங்களுக்கு அதிக கமிட்மெண்ட் தேவை.

அவருக்கு எதிர்கால படங்களுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளனர்.இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kalki 2898 Part 2 Shocking change due Deepika Padukones lack cooperation


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->