ராதிகாவின் ‘தாய் கிழவி’ ஓடிடி ரிலீஸ் எப்போது? எப்போ வெளியாகிறது தெரியுமா?
When is Radhika Thai Kishavi OTT release Do you know when it will be released
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள “தாய் கிழவி” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால் வசூலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த படத்தை புதுமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ளார். ராதிகா “பவுனுத்தாயி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் பால சரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு நிவாஷ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
ரிலீஸ் ஆன முதல் நாளிலிருந்தே நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த படம், தற்போது வரை உலகம் முழுவதும் ரூ.70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களில், தமிழ்நாட்டில் 50 கோடி வசூல் கடந்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
மேலும், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலிலும் இந்த படம் முன்னிலையில் உள்ளது. தற்போது சிவகார்த்திகேயனின் “பராசக்தி” திரைப்படம் 57 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருக்கும் நிலையில், “தாய் கிழவி” 55 கோடி வசூலுடன் அதனை நெருங்கி வருகிறது.
இந்நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. “தாய் கிழவி” திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரு படம் திரையரங்கில் வெளியான 28 நாட்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும். அந்த கணக்கில் பார்த்தால், இந்த படம் மார்ச் 26 அன்று ஓடிடியில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
ஆனால், படம் திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வசூலை பெற்று வருவதால், அதன் ஓடிடி வெளியீடு ஏப்ரல் முதல் வாரத்திற்கு தள்ளிப் போகலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
When is Radhika Thai Kishavi OTT release Do you know when it will be released