அதிமுக – அமமுக இணைவு? உண்மையில்லை டி.டி.வி. தினகரன்..! - Seithipunal
Seithipunal


அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இடைத்தேர்தலில் தவெக-வுக்கு எதிராக பொது வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக பேசும் போது இந்த இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போக்குவரத்து நெரிசலான மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய இடத்தில் புதிய சட்டமன்றத்தை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது ஏற்புடையது அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நிஜத்தில் வில்லனாகவும் இருப்பவர் தான் விஜய் என்று முதல்வரை விமர்சித்துள்ளதோடு, நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை தவெகவுக்கு எதிராக நிறுத்துவது ஏற்கத்தக்கது. அது நல்ல யோசனை. அதனை கூட்டணி கட்சிகளோடு கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போக்குவரத்து நெரிசலான, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய இடத்தில் புதிய சட்டமன்றத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளமை ஏற்புடையது அல்ல என்றும், தமிழக முதல்வரின் வீட்டுக்கு அருகிலேயே சட்டமன்றம் அமைக்க திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளதாகவும், அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. இரண்டு கட்சிகளும் இணைக்கப்படும் என்பது போன்ற செய்திகளில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran says there is no merger between the AIADMK and the AMMK


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->