ChatGPT இல் ட்ரண்டின் 80s போட்டோக்களை உருவாக்குகிறீர்களா..? உஷாரா இருங்க.. பின்னணியில் என்ன நடக்கிறது தெரியுமா?
Be careful when generating 80s style photos on ChatGPT
கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் ஆக்கிரமித்துள்ளது ChatGPT ஏஐ தொழில்நுட்பத்தில் ஒரு புதிய டிரெண்டிங்காக பயனர்கள் தங்கள் படங்களைப் பதிவேற்றி அவற்றை 1980-களின் ரெட்ரோ பாணிப் புகைப்படங்கள். இதனை பயன்படுத்தும் போது, உங்கள் சொந்தப் படங்களைச் ChatGPT-இல் பதிவேற்றும் முன், என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அதாவது நாம் ஸ்மார்ட்போனில் நாம் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்கள் நமது 'தனிப்பட்ட தரவுகள்' ஆகும். அவை தனிநபர்களை அடையாளம் காண உதவுகின்றன. முக்கியமாக அந்தப் படத்தில், படம் எடுக்கப்பட்ட நேரம், மொபைல் சாதனத்தின் பெயர் மற்றும் இடம் போன்ற 'டேட்டா' அடங்கி இருக்கும்.
நீங்கள் அந்தப் படத்தைப் ChatGPT -இல் பதிவேற்றுவதன் மூலம், உங்கள் படத்தின் மற்றொரு நகல், அந்தச் செயற்கை நுண்ணறிவுச் சேவையின் தனியுரிமைக் கொள்கைகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு அனுப்பப்படுகிறது.

அவ்வாறு பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள், Chat History இல் ஒரு பகுதியாகக் கணக்கில் சேமிக்கப்படுகின்றன. அத்தோடு, நீங்கள் உரையாடலை நீக்கினாலும், அந்தத் தரவு OpenAI அமைப்புகளில் சுமார் 30 நாட்கள் வரை இருக்கலாம். அல்லது சட்ட நோக்கங்களுக்காகவோ அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காகவோ சில தகவல்கள் நீண்ட காலத்திற்குத் தக்கவைக்கப்படலாம்.
அதேபோன்று, வணிக மற்றும் API கணக்குகளில் பயிற்சிக்காகத் தரவு மாதிரிகள் பயன்படுத்தப்படாத நிலையில், தனிநபர் கணக்குகளுக்கான கொள்கைகள் வேறுபட்டவை.
படங்கள் மட்டுமல்ல, பிற தகவல்களும் சேமிக்கப்படுகின்றன.
முக்கியமாக உங்கள் புகைப்படங்களுடன் கூடுதலாக, உங்கள் IP முகவரி, பயன்படுத்தும் சாதனம், நீங்கள் எதில் ஆர்வமுள்ளவர், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இருப்பிடம் போன்ற பயனர் வழங்கும் தகவல்களையும் AI சேவைகள் சேகரிக்கின்றன. தொடர்ச்சியான பயன்பாட்டின் மூலம், ஒரு நபரின் விவரங்களையும் பழக்கவழக்கங்களையும் AI மூலம் அடையாளம் காண முடியும் என்பதும் நீங்கள் தெரிந்துக்கொள்ள கூடியது அவசியமாகும்.

நீங்கள் ChatGPT -இல் புகைப்படங்களைப் பதிவேற்றும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
மற்றவர்களின் புகைப்படங்களையோ அல்லது அவர்களின் குழந்தைகளின் புகைப்படங்களையோ அவர்களின் அனுமதியின்றி பதிவேற்றம் கூடாது.
தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய படங்களைத் தவிர்க்க வேண்டும்.
பயிற்சிக்காக AI மாடல்களுக்கு உங்கள் தகவல்களை வழங்குவதைத் தவிர்க்க, இருப்பிடம்/மாடல் பயிற்சி விருப்பங்களை முடக்கவும்.
தேவையற்ற கோப்புகளையும் உரையாடல்களையும் பகிர்வதை நீங்கள் தவிர்க்கலாம்.
பழையகாலப் படங்கள் வைரலாகி சில நாட்களில் மறைந்து போகலாம். ஆனால், நீங்கள் வழங்கும் தரவுகள் கணினி அமைப்புகளில் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
English Summary
Be careful when generating 80s style photos on ChatGPT