நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்; Le Mans Cup அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Chief Minister Vijay to flag off the car race featuring actor Ajith Kumar
தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் ஒரு வார பயணமாக இன்று லண்டன் புறப்பட்டார். துபாய் வழியாக லண்டன் செல்லும் முதல்வர் விஜய், தொழிலதிபர்களை சந்தித்து பேச உள்ளார்.
இந்த பயணத்தை முடித்துவிட்டு வரும் 17-ஆம் தேதி சென்னை திரும்பவுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவையில், உலகத்தரம் வாய்ந்த ஒரு 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' (Motor Sports City) மாநிலத்தில் அமைக்கப்படும் விஜய்அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிடுகிறார்.
இதன் ஒரு பகுதியாக, உலக புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்'-ஐ பார்வையிடும் முதல்வர் விஜய், அங்கு நடைபெறும் கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக லே மான்ஸ் கோப்பை (Le Mans Cup) நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் தனது குழுவினருடன் பங்கேற்கிறார். அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை விஜய் தொடங்கி வைக்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக லண்டனில் தங்கியிருந்து தனது குழுவினருடன் அஜித் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும், அதனை ஷாலினி தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
Chief Minister Vijay to flag off the car race featuring actor Ajith Kumar