பரபரப்பான சர்ச்சை...! 'ஜாதியை நம்பி நான் வாழ்வதில்லை...இனி இந்த தவறு நடக்காது'...! - பார்த்திபனின் மன்னிப்பு பதிவு
Stirring Controversy do not live my life based caste This mistake not happen again Parthiban Apology Post
பார்த்திபன் நடித்துள்ள தெலுங்கு திரைப்படமான உஸ்தாத் பகத் சிங் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத் நகரில் நடைபெற்றபோது, பார்த்திபன் தன்னுடைய ஜாதியை குறிப்பிடும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடும் விமர்சனங்களை கிளப்பியது.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பார்த்திபன் தனது சமூக வலைதளப் பதிவில் மன்னிப்பை தெரிவித்துள்ளார். “எந்த உள்நோக்கமும் இல்லாமல், யாரையும் காயப்படுத்தும் எண்ணமின்றி தான் அந்த வார்த்தைகள் வெளியானது.
இது என் நீண்டகால அனுபவத்தில் நடந்த முதல் தவறு. ஜாதியை முன்னிறுத்துபவர்களை நான் எப்போதும் எதிர்த்தவன் தான்; அப்படியிருக்க நான் அதையே செய்வது எனக்கே வேதனையாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “என் திறமையை மட்டுமே நம்பி வாழ்பவன் நான். யாரிடமும் ஜாதியை முன்வைத்து முன்னேற நினைத்ததில்லை.
என் பேச்சால் மனவேதனை அடைந்த அனைவரிடமும் இதயபூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன். இனி இப்படியான தவறு மறுபடியும் நடக்காது” என அவர் உறுதியளித்துள்ளார்.
English Summary
Stirring Controversy do not live my life based caste This mistake not happen again Parthiban Apology Post