இந்தூரில் பயங்கர வெடி...! அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் விபத்து...! - 7 பேர் உயிரிழப்பு...! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள மூன்று அடுக்குக் குடியிருப்பு ஒன்றில் அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும், அதிகாலை 4 மணியளவில் பிரிஜேஸ்வரி அனெக்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பிடித்ததாக வந்த தகவலையடுத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தின்போது பக்கத்து வீட்டின் வழியாகச் சென்ற மீட்புக் குழுவினர் 3 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், வீட்டிற்கு வெளியே மின்சார வாகனம் ஒன்று சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது, அதன் சார்ஜிங் பாயிண்ட் வெடித்து கார் தீப்பிடித்ததே விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், காரில் பற்றிய தீ வீட்டிற்குள் பரவியதுடன், அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்களில் சில பயங்கரமாக வெடித்ததால் விபத்தின் வீரியம் அதிகரித்துள்ளது.

 அதுமட்டுமின்றி, அந்த வீடு பாலிமர் தொழில் செய்து வரும் மனோஜ் புகாலியா என்பவருக்குச் சொந்தமானது என்பதால், அங்கிருந்த வேதிப்பொருட்களும் தீ வேகமாகப் பரவக் காரணமாக இருந்துள்ளன.

மேலும், மின்னணு கதவு பூட்டுகள் (Electronic Locks) இருந்ததால் மின்வெட்டு ஏற்பட்டவுடன் கதவுகளைத் திறக்க முடியாமல் போனது மீட்புப் பணியில் பெரும் சவாலாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Massive Explosion Indore Cylinder Accident Apartment Complex 7 Dead


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->