கேட்கும் போதே நெஞ்சம் பதறுது...! குடும்பத்தினர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு...! - மதுபோதை தொழிலாளியின் வெறிச்செயல்...! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குடும்பத் தகராறு கொடூரமாக மாறி, மனைவி மற்றும் இரு மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ் (65), அவரது மனைவி விஜயலெட்சுமி (60), திருமணமாகி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த மூத்த மகள் மேனகா (38), இளைய மகள் மவுனிகா (25) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

மவுனிகாவுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை.செல்வராஜ் அடிக்கடி குடும்பச் செலவுக்காக பணம் கேட்டு மனைவியிடம் வற்புறுத்தி வந்ததாகவும், இதனால் கணவன்–மனைவிக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடும் வாக்குவாதமும் நிலவி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் பணம் கேட்டு ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்துள்ளது. மனைவி பணம் வழங்க மறுத்ததால் கடும் ஆத்திரமடைந்த செல்வராஜ், நேற்று அதிகாலை வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவி மற்றும் இரு மகள்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது.

தீயில் சிக்கிய மூவரும் வலியால் அலறித் துடித்தனர். அவர்களின் கூக்குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, உடனடியாக தீயை அணைத்து உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் பலத்த தீக்காயங்களுடன் இருந்த விஜயலெட்சுமி, மேனகா மற்றும் மவுனிகா ஆகியோர் மீட்கப்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறும், பணம் தொடர்பான மோதலும் மூன்று உயிர்களை ஆபத்தான நிலைக்குத் தள்ளிய இந்தக் கொடூரச் சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

My heart aches just hearing this Pouring petrol family and setting them fire crazy act alcoholic worker


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->