விஜய்–த்ரிஷா திருமண வதந்தி மீண்டும் வைரல்…கிளம்பிய புது சர்ச்சை! ரசிகர்களிடையே புதிய விவாதம்!
Vijay Trisha wedding rumours go viral again a new controversy has erupted A new debate among fans
நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து திருமண வதந்திகள் மீண்டும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சில நாட்களாக அமைதியாக இருந்த இந்த பேச்சு, சமீபத்தில் நடந்த ஒரு சிறிய ஆன்லைன் சம்பவத்தால் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையில், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்திகள் கூட தற்போது பேசுபொருளாகியுள்ளது. அவரது மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், நடிகை த்ரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன் சமூக வலைதளத்தில் பரவிய ஒரு பதிவுக்கு ‘லைக்’ செய்ததாக கூறப்படுகிறது. அந்த பதிவில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விஜய் மற்றும் த்ரிஷா திருமணம் நடைபெறலாம் என்ற கருத்து இடம்பெற்றிருந்தது. இந்த ‘லைக்’ தான் தற்போது ரசிகர்களிடையே பல்வேறு யூகங்களையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.
ஆனால், இதுகுறித்து விஜயோ அல்லது த்ரிஷாவோ எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.
அரசியல் பயணத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் விஜயைச் சுற்றி இத்தகைய தனிப்பட்ட செய்திகள் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன. இது வெறும் வதந்தியா அல்லது எதிர்காலத்தில் ஏதேனும் அறிவிப்பு வருமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.
English Summary
Vijay Trisha wedding rumours go viral again a new controversy has erupted A new debate among fans