‘டிமான்ட்டி காலனி 3’ ரெடி…லைபரியனா மிரட்டப்போற மெயின் வில்லனே இவர் தானாம்..யாருன்னு பாருங்க! - Seithipunal
Seithipunal


அருள்நிதி நடிப்பில் வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் 2015-ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் வெளியான “டிமான்ட்டி காலனி 2” படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து தற்போது “டிமான்ட்டி காலனி 3” படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தை வரவிருக்கும் சம்மர் சீசனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காகவே படத்தின் புரமோஷனை முன்னதாகவே தொடங்கியுள்ள படக்குழு, முக்கிய வில்லன் யார் என்பதை வெளிப்படுத்தும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

“டிமான்ட்டி காலனி” முதல் பாகத்திலிருந்தே மர்மமாக பேசப்பட்ட ‘லைப்ரரியன்’ என்ற கதாபாத்திரம் மூன்றாவது பாகத்தில் முக்கிய வில்லனாக வரும் என கூறப்படுகிறது. அந்த லைப்ரரியன் வேடத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கிறார்.

“ஆரண்ய காண்டம்”, “ஜோக்கர்”, “மின்னல் முரளி”, “பாட்டில் ராதா”, “மை லார்ட்” போன்ற படங்களில் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த குரு சோமசுந்தரம், இந்த படத்தில் வில்லனாக மிரட்டப் போவதாக கூறப்படுகிறது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது படங்களில் ஹாலிவுட் தரத்தில் காட்சிகளை உருவாக்குவதில் பெயர் பெற்றவர். அதேபோல், “டிமான்ட்டி காலனி 3” படத்திலும் வில்லன் கதாபாத்திரமான லைப்ரரியனை உருவாக்கும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் வெளியாகும் போது திரையரங்குகளில் மீண்டும் ஒரு முறை திகில் அனுபவத்தை கொடுக்கத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்குப் பிறகும் இந்த தொடரில் மேலும் பாகங்கள் வருமா, அல்லது “டிமான்ட்டி காலனி 3” தான் இறுதி பாகமா என்ற கேள்வியும் தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Demon Colony 3 is ready he the main villain who going to threaten Liberia look who it is


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->