டி20 உலகக்கோப்பை வெற்றி: இந்திய அணியின் ஆதிக்கத்திற்கு காரணம் என்ன? – சூர்யகுமார் யாதவ் விளக்கம்
T20 World Cup victory What is the reason for the dominance of the Indian team Suryakumar Yadav explains
கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்குப் பிறகு ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால், இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.
அவரது தலைமையில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த ஒரு டி20 தொடரையும் இழக்காமல் வெற்றிகளை மட்டுமே பெற்று வந்துள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரிலும் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியைத் தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் டி20 தொடரை இழக்காத கேப்டன் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.
இந்திய டி20 அணியின் ஆதிக்கத்திற்கு காரணம் குறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில்,
ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களே இந்திய அணியின் வலிமைக்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களின் மூலம் புதிய திறமையான வீரர்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றனர். அவர்களின் திறமையை நேரடியாக பார்க்க முடிவதால் அணிக்கான தேர்வும் வலுவாகிறது.
இப்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட்டுக்கான வீரர்கள் அதிக அளவில் இருப்பதால், ஒரே நேரத்தில் மூன்று இந்திய டி20 அணிகளை உருவாக்கும் அளவிற்கு திறமையான வீரர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்திய கிரிக்கெட்டின் அடித்தளம் வலுவாக இருப்பதால் இளம் வீரர்கள் உள்நாட்டு தொடர்கள் மற்றும் ஐபிஎல் மூலம் சர்வதேச தரத்திற்கு விரைவாக வளர முடிகிறது. அதுவே இந்திய அணியை உலக அளவில் வலுவான அணியாக மாற்றியுள்ளது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
English Summary
T20 World Cup victory What is the reason for the dominance of the Indian team Suryakumar Yadav explains