பதறவைக்கும் 'பங்கர் பஸ்டர்'....! ஈரானுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா! - ஹோர்முஸ் நீரிணையில் 2,200 கிலோ குண்டுகள் வீச்சு!
Terrifying Bunker Buster US Strikes Back at Iran 2200 Kilogram Bombs Dropped Strait of Hormuz
ஈரானின் அணுஆயுதக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி அயத்துல்லா கமேனி கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டு இரண்டு வாரங்களைக் கடந்துள்ள நிலையில், ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்கா சுமார் 2,200 கிலோ (5,000 பவுண்ட்) எடையுள்ள 'பங்கர் பஸ்டர்' குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் ஏவுகணைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தச் சோதனை வெற்றி பெற்றதாக அமெரிக்க ராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலான நேட்டோ நட்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Terrifying Bunker Buster US Strikes Back at Iran 2200 Kilogram Bombs Dropped Strait of Hormuz