பண்ருட்டி அருகே பழமையான சுடுமண் பொம்மைகள் ...! 10 -13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என ஆய்வில் வெளிச்சம்...!
Ancient Terracotta Figurines Near Panruti Research Reveals They Date Back 10th 13th Centuries
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அக்கடவல்லி மற்றும் கண்டரக்கோட்டை பகுதிகளில், தென்பெண்ணை ஆற்றுப் படுகையில் மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு களஆய்வில் கி.பி. 10 மற்றும் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்காலச் சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தலைமையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, தலைப்பாகையுடன் கூடிய சிரித்த முகத்தைக் கொண்ட ஆண் உருவ சுடுமண் பொம்மையின் தலைப்பகுதியும், தேய்ந்த நிலையில் ஒரு பெண் உருவப் பொம்மையும் கிடைத்துள்ளன.
ஆண் பொம்மையின் தலைப்பகுதி 12 செ.மீ உயரமும், பெண் பொம்மை 16.5 செ.மீ உயரமும் கொண்டவை.
ஏற்கனவே இந்தப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட சுடுமண் பொம்மைகள் கிடைத்துள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த ஆதாரங்கள் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வாழ்ந்த பழங்கால மக்களின் கலைத்திறனைப் பறைசாற்றுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Ancient Terracotta Figurines Near Panruti Research Reveals They Date Back 10th 13th Centuries