திண்டிவனம் அருகே பயங்கர விபத்து... பேருந்து மீது லாரி மோதல்....! - ஒருவர் பலி.. 36 பேர் காயம்!
Horrific Accident Near Tindivanam Lorry Collides Bus One Dead 36 Injured
திண்டிவனம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்து ஒன்று ஏற்பட்டது.அதில் பெண் ஒருவர் உயிரிழந்ததையடுத்து 36 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை உடைத்துக்கொண்டு எதிரே வந்த அரசுப் பேருந்து மீது பலமாக மோதியது.
மேலும், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சசிகலா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த தகவலறிந்து வந்த காவலர்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் படையினர், இடிபாடுகளில் சிக்கிய 36 பயணிகளை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக அந்தச் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவலர்கள், காயமடைந்தவர்களின் விவரங்களைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Horrific Accident Near Tindivanam Lorry Collides Bus One Dead 36 Injured