ஆஸ்கார் மேடையில் கௌரவிக்கப்பட்ட மறைந்த இந்திய சினிமா ஆளுமைகள்..! - Seithipunal
Seithipunal


98-வது ஆஸ்கர் விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. இதில் 'One Battle After Another' படம் 06 விருதுகளையும், 'Sinners' 04 விருதுகளையும் வென்றன. குறிப்பாக, 'One Battle After Another' படத்திற்காக தன முதல் ஆஸ்கர் விருதை Paul Thomas Anderson வென்றதோடு, சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை முதன்முறையாக  Autumn Durald Arkapaw என்ற பெண் ஒளிப்பதிவாளர் வென்றுள்ளார். 

இந்த விருது வழங்கும் நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக 2025 - 2026 காலகட்டத்தில் மறைந்த கலைஞர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்களை கௌரவிக்கும் வகையில், In Memoriam நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது, விருது வழங்கும் நிகழ்வில் இடைவெளி விட்டு, இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராப் ரெய்னர், ராபர்ட் ரெட்ஃபோர்ட், ராபர்ட் டுவால், கேத்தரின் ஓ'ஹாரா, டயான் கீடன் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு ஒரு சிலருக்கு மட்டும் தனியாக தயாரிக்கப்பட்ட அஞ்சலி வீடியோக்கள் திரையிடப்பட்டன.

அதன்படி, கடந்த ஆண்டு மறைந்த நட்சத்திரங்களின் பட்டியல் நீண்டது என்பதால் அமைப்பாளர்கள், ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரிவான பட்டியலை வெளியிட்டனர். 

அந்தப் பட்டியலில், இந்திய சினிமா நட்சத்திரங்களாக மிளிர்ந்த தர்மேந்திரா, மனோஜ் குமார் பி, சரோஜா தேவி மற்றும் கோட்டா சீனிவாச ராவ் போன்ற குறிப்பிடத்தக்க ஆளுமைகளை ஆஸ்கர் விருது கௌரவித்தது. இதில், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பாலிவுட்டின் மிகவும் பிரியமான நட்சத்திரங்களில் ஒருவரான தர்மேந்திரா, மனோஜ் குமாருடன் இணைந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றார்.

அடுத்ததாக, தென்னிந்தியத் திரையுலகில், கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை பி.சரோஜா தேவியும் தனது குறிப்பிடத்தக்க திரைப்பயணத்திற்காக நினைவு கூரப்பட்டார். மேலும், மூத்த தெலுங்கு நடிகரும் முன்னாள் அரசியல்வாதியுமான கோட்டா ஸ்ரீனிவாச ராவும் இங்கு நினைவுகூரப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Late Indian Cinema Personalities Honored on the Oscar Stage


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->