எண்ணூரில் சோகம்; கடலில் குளிக்க சென்ற மாணவன் மாயமான நிலையில் சடலமாக மீட்பு..! - Seithipunal
Seithipunal


நண்பருடன் கடலில் குளித்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். 

சென்னை மணலி கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம் 11-ஆம் படித்து வந்துள்ளார். நேற்று மாலை நண்பர் யுவராஜ் (19) உட்பட 04 பேருடன் மாலை எண்ணூர் பெரியகுப்பம் கடலில் குளிக்க சென்றுள்ளார். 

கடலில் குளித்துக்கொண்டு இருக்கையில் திடீரென வந்த ராட்சத அலையில் இருவர் சிக்கி மாயமாகியுள்ளனர். நண்பர்கள் கூச்சல் போட்டதால் அங்கு இருந்த மீனவர்கள் ஓடிவந்து நடந்ததாகி விசாரித்துள்ளனர். பின்னர் உடனடியாக கடலில் இறங்கி தத்தளித்த யுவராஜை மீட்டு கொண்டுவந்துள்ளனர். ஆனால், ஜீவானந்தம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எண்ணூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையில் வீரர்கள் வந்து மிதவைகளை பயன்படுத்தி மாயமான சிறுவனை தேடியுள்ளனர். ஆனாலும் கிடைக்கவில்லை, இந்நிலையில், நேற்றிரவு அதே பகுதியில் மாணவன் ஜீவானந்தத்தின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து அறிந்த போலீசார் உடனடியாக வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, இது சம்பந்தமாக எண்ணூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Student caught in sea waves in Ennore recovered dead


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->