டெல்லி அணியில் இடம் கிடைக்கவில்லை! கேரளாவுக்கு அழைத்துச் சென்ற அப்பா! இன்னைக்கு நான் இவ்ளோ தூரம் வந்ததுக்கு காரணம்! சஞ்சு சாம்சனின் நெகிழ்ச்சி கதை! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் சந்தித்த சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக டெல்லி அணிக்கான தேர்வில் தனது பெயர் இடம்பெறாததை தொடர்ந்து, தனது தந்தை எடுத்த அதிரடி முடிவுதான் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து மூன்றே நாட்களில் குடும்பத்துடன் கேரளாவுக்கு குடிபெயர்ந்ததாகவும், அதன் பிறகு கேரள மாநில அணிக்காக விளையாட தொடங்கி இன்று இந்திய அணி வரை தனது பயணம் வந்திருப்பதாகவும் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார்.உலகக்கோப்பையில் உச்சகட்ட ஃபார்மில் இருந்த சஞ்சு சாம்சன், அதன்பிறகு நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

டி20 உலகக்கோப்பைக்கு பிறகு நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் சஞ்சு சாம்சன் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அவர் மொத்தமாக 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து கேள்விகள் எழத் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியிலும் அவர் ஏமாற்றம் அளித்தார். அந்தப் போட்டியில் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் பெரிய ரன்கள் குவிக்க முடியாததால், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு முன்னதாக தனது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சஞ்சு சாம்சன் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.குறிப்பாக தனது தந்தை எடுத்த ஒரு முக்கிய முடிவுதான் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, தனது நண்பர்கள் டெல்லி கிரிக்கெட் அகாடமியின் ஜெர்சிகளை அணிந்து விளையாடுவதை பார்த்ததாக சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

அவர்களை பார்த்த பிறகுதான் டெல்லி மாநில அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை தனக்குள் உருவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநில அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற கனவுடன் சஞ்சு சாம்சன் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.அதன்பிறகு டெல்லி அணிக்கான பல்வேறு தேர்வுகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். ஆனால் டெல்லியில் திறமையான வீரர்கள் அதிகளவில் இருந்ததால், அணியில் இடம்பிடிப்பதற்கான போட்டி மிகவும் கடினமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒருமுறை டெல்லி அணிக்கான தேர்வு ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் பங்கேற்றுள்ளார். அந்த தேர்வு முடிவுகள் வெளியானபோது, அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

டெல்லி அணியில் தனது பெயர் இடம்பெறாததை அறிந்த சஞ்சு சாம்சன் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.வீட்டுக்கு திரும்பிய அவர், யாரிடமும் எதுவும் சொல்லாமல் நேராக சென்று தூங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.தனது மகனின் ஏமாற்றத்தை உணர்ந்த அவரது தந்தை, உடனடியாக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.சஞ்சுவின் தாயிடம் சென்ற அவர், “நாம் கேரளாவுக்கு செல்லப் போகிறோம். இங்கிருந்து கிளம்பிவிடலாம்” என்று கூறியுள்ளார்.

சஞ்சு சாம்சனின் தந்தை திடீரென கேரளாவுக்கு செல்ல முடிவு செய்தபோது, அவரது தாய் வேறு ஒரு யோசனையை முன்வைத்துள்ளார்.சஞ்சு 10ஆம் வகுப்பு படிப்பை முடிக்கும் வரை டெல்லியிலேயே இருக்கலாம் என்றும், அதன் பிறகு கேரளாவுக்கு செல்லலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.ஆனால் அந்த யோசனையை சஞ்சுவின் தந்தை ஏற்கவில்லை.

தனது மகனின் கிரிக்கெட் எதிர்காலம் முக்கியம் என்று கருதிய அவர், உடனடியாக கேரளாவுக்கு செல்ல வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.

அந்த முடிவை எடுத்த மூன்றே நாட்களில் சஞ்சு சாம்சனின் குடும்பம் டெல்லியில் இருந்து கேரளாவுக்கு சென்றுள்ளது.கேரளாவுக்கு சென்ற பிறகு அங்குள்ள பள்ளியில் தனது படிப்பை தொடர்ந்த சஞ்சு சாம்சன், மாநில கிரிக்கெட் அணிக்காக விளையாடும் முயற்சியை தொடங்கினார்.

டெல்லியில் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த அவருக்கு, கேரளாவில் புதிய கிரிக்கெட் பயணம் தொடங்கியது.அங்கிருந்து படிப்படியாக தனது திறமையை நிரூபித்த சஞ்சு சாம்சன், கேரள மாநில அணியில் இடம்பிடித்தார்.

கேரள மாநில அணியில் தொடங்கிய சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் பயணம், பின்னர் ஐபிஎல் மற்றும் இந்திய அணி வரை நீண்டது.தனது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையை நினைவுகூர்ந்த அவர், “கேரளாவில் உள்ள பள்ளியில் படிக்கத் தொடங்கி, அந்த மாநில அணிக்காக விளையாட ஆரம்பித்தேன். தற்போது என்னுடைய கிரிக்கெட் பயணம் கேரள அணியில் இருந்து இந்திய அணி வரை வந்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

டெல்லி அணியில் வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றத்தில் இருந்த மகனை பார்த்து, மூன்றே நாட்களில் குடும்பத்தையே கேரளாவுக்கு அழைத்துச் சென்ற தந்தையின் அந்த ஒரு முடிவு, சஞ்சு சாம்சனின் ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையையே மாற்றியதாக பார்க்கப்படுகிறது.

ஒரு தேர்வில் ஏற்பட்ட தோல்வி தனது கனவுக்கு முற்றுப்புள்ளியாக மாறாமல், புதிய பாதைக்கு தொடக்கமாக அமைந்ததை சஞ்சு சாம்சனின் இந்த கிரிக்கெட் பயணம் எடுத்துக்காட்டியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Didnot make the cut for the Delhi team Dad took me to Kerala The reason Ive come this far today Sanju Samson heartwarming story


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->