ஆதாரங்களை அழிக்க நடந்த சதியா...? பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட மனித எலும்புக்கூடு...! - தடய அறிவியல் துறை தீவிரம்...! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள புத்தனந்தல் கிராமத்தில் மர்மமான சூழலில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெடிலம் ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள சுடுகாட்டுப் பகுதியில், கருப்பு நிற பிளாஸ்டிக் கவரில் முழுமையாக சுற்றப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு கிடந்ததை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற களமருதூர் காவலர்கள், எலும்புக்கூட்டை பார்வையிட்டு கைப்பற்றி, சம்பவ இடத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா என்பது உறுதியாக தெரியவரவில்லை.

இதையடுத்து, அந்த எலும்புக்கூடு யாருக்கு சொந்தமானது, இயற்கையாக உயிரிழந்தவரின் உடலா அல்லது கொலை செய்யப்பட்ட நபரின் எலும்புக்கூடா, வேறு இடத்தில் இருந்து மர்ம நபர்கள் கொண்டு வந்து சுடுகாட்டில் வீசிச் சென்றார்களா, இதன் பின்னணியில் குற்றச்சம்பவம் ஏதேனும் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சுடுகாட்டில் கருப்பு நிற பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட இந்த மர்ம சம்பவம், புத்தனந்தல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Was it conspiracy destroy evidence Human skeleton wrapped plastic Forensic Science Department serious


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->