ஜூலை 09 நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் 'பெத்தி'; ராம் சரணின் குஷியில் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான 'பெத்தி' திரைப்படம் கடந்த ஜூன்-04 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் எதிர்மறையான விமர்சனங்கள் எதிர்கொண்டாலும், படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை குவித்துள்ளது. 

குறிப்பாக, ஜான்வி கபூரின் கதாபாத்திரம் குறித்து இணையத்தில் எழுந்த கடும் விவாதங்களையும் தாண்டி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இதன் காரணமாக தெலுங்குவில் 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய வணிகரீதியான வெற்றிகளில் ஒன்றாக 'பெத்தி' உருவெடுத்துள்ளது.

இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.286 கோடியும், உலகளவில் ஒட்டுமொத்தமாக ரூ338.98 கோடியும் இதுவரை வசூலித்துள்ளது.

இந்நிலையில், வரும் ஜூலை 09 முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'பேத்தி' வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு தவிர்த்து தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. அத்துடன், இதன் இந்தி பதிப்பு விரைவில் வெளியாகும் என நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ram Charans Pethi to be released on Netflix OTT on July 09


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->