எனக்கு தனிமைதான் பிடிக்கும்! எப்போ பார்த்தாலும் ஒரே கூட்டம்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓபனா சொல்லிருக்காரே! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமீப காலமாக அவரது திரைப்படங்கள் மற்றும் அரசியல் தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவர் பல ஆண்டுகளுக்கு முன் கூறியிருந்த கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளன.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. குறிப்பாக, கதைக்களம், திரைக்கதை மற்றும் மேக்கிங் குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தனர். இருப்பினும், ரஜினியின் நடிப்பு மட்டும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு படத்திலும், கமலுடன் இணைந்து மற்றொரு படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், 1990களில் ரஜினிகாந்த் அளித்திருந்த ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர், “எனக்கு தனிமைதான் மிகவும் பிடிக்கும். எப்போதும் என்னைச் சுற்றி மக்கள் கூட்டம் இருக்கும். அதனால் சில நேரங்களில் தனியாக இருக்க வேண்டும் என்று தோன்றும். தத்துவங்கள் மற்றும் வாழ்க்கை பற்றிய புத்தகங்களை அதிகமாகப் படிப்பேன்” என்று கூறியிருந்தார்.

ரஜினியின் இந்த பேட்டி தற்போது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. காரணம், சமீப காலமாக அவர் காட்டி வரும் அமைதியான அணுகுமுறையும், அரசியல் மற்றும் சினிமா விவாதங்களில் அளவான பதில்களும் தான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தன்னுடைய ஆரம்ப காலங்களில் மிகவும் நேரடியாகவும், எந்த விஷயத்தையும் தயக்கமின்றி பேசக்கூடியவராகவும் இருந்த ரஜினிகாந்த், காலப்போக்கில் மிகவும் பக்குவமானவராக மாறிவிட்டார் என்று பலரும் குறிப்பிடுகின்றனர்.

சமீபத்தில் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதும், விஜய் வெற்றி குறித்து கேட்கப்பட்டபோது எதுவும் பேசாமல் தனது வழக்கமான வணக்கத்தை மட்டும் தெரிவித்துவிட்டு சென்றதும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

இதற்கிடையில், “ரஜினி - விஜய் இடையே கருத்து வேறுபாடு உள்ளது” என்ற பேச்சுகளும் இணையத்தில் பரவி வரும் நிலையில், ரஜினியின் இந்த அமைதியான மற்றும் தத்துவமயமான அணுகுமுறை மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I like solitude No matter where I look there always a crowd Superstar Rajinikanth has said it in his opening remarks


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->