கோட்-சூட்டில் தமிழக முதல்வர் விஜய்! ‘கோட் சூட்’ ரகசியம்!இப்படியொரு குட்டி ஸ்டோரி இருக்கா...!
Tamil Nadu Chief Minister Vijay in a coat suit The secret of the coat suit Is there a little story like this
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், கோட்-சூட் அணிந்து சட்டமன்றத்திற்கு வந்த முதல் அரசியல்வாதி என்ற வகையில் கவனம் ஈர்த்துள்ளார். பாரம்பரியமாக தமிழக அரசியல்வாதிகள் வெள்ளை வேஷ்டி மற்றும் சட்டையில் பொதுவெளியில் தோன்றுவது வழக்கமாக இருந்த நிலையில், விஜய்யின் இந்த புதிய தோற்றம் அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதத்தை உருவாக்கியுள்ளது.
முதல்வராக பதவியேற்ற நாளில் விஜய் அணிந்திருந்த கருப்பு நிற கோட்-சூட் பலரது கவனத்தையும் கவர்ந்தது. இதுவரை தமிழக அரசியலில் காணப்பட்ட பாரம்பரிய அரசியல் உடைமுறையிலிருந்து விலகி, மேற்கத்திய பாணியில் அவர் சட்டமன்றத்திற்கு வந்தது ஒரு புதிய அரசியல் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. சிலர் விஜய்யின் இந்த தோற்றத்தை “நவீன தலைமுறை அரசியல்” என பாராட்டி வருகிறார்கள். அதேசமயம், “தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி-சட்டை அணிந்திருக்கலாம்” என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
விஜய்யின் கோட்-சூட்டை பிரபல ஆடை வடிவமைப்பாளர் சபிர் அகமது வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படத்தில் இடம்பெற்ற தோற்றத்தை அடிப்படையாக கொண்டு இந்த உடை வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கோட்டின் நிறமாக கருப்பை தேர்வு செய்தது விஜய் தானாம். “கருப்பு என்பது அதிகாரம், ஆளுமை மற்றும் தனித்துவத்தை பிரதிபலிக்கும் நிறம்” என்பதால் அதைத் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், விஜய்யின் உடலமைப்பிற்கு ஏற்றவாறு கோட்-சூட் சரியாக பொருந்தும் வகையில் அதைத் தயாரிக்க மட்டும் இரண்டு நாட்கள் எடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு விஜய் பல முக்கிய அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது கவனம் பெற்றது. முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ் மற்றும் சீமான் உள்ளிட்ட தலைவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
அதேநேரத்தில், புதிய அரசு பொறுப்பேற்ற உடனேயே பல அதிரடி நடவடிக்கைகளையும் தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமாக, பள்ளி, கல்லூரி மற்றும் கோவில் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு கமல்ஹாசன், பிரேமலதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
விரைவில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள விஜய் தலைமையிலான அரசு, தமிழக அரசியலில் புதிய அரசியல் மற்றும் நிர்வாக பாணியை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
Tamil Nadu Chief Minister Vijay in a coat suit The secret of the coat suit Is there a little story like this