நம்ப மறுத்த கூட்டம்...சாதித்துக் காட்டிய விஜய்...! – இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கொடுத்த 'பவர்ஃபுல்' ஸ்டேட்மென்ட்...!
crowd refused believe it Vijay showed his talent Director RJ Balaji powerful statement
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் சூர்யா, இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நீதிமன்ற வழக்கை மையமாகக் கொண்டு, அதனுடன் ஆன்மிக நம்பிக்கைகளும் உணர்ச்சி மிகுந்த சம்பவங்களும் பின்னிப்பிணைந்த திரைக்கதையாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படக்குழு முழு வீச்சில் விளம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.சமீபத்தில் வெளியான சூர்யா- திரிஷா இணைந்த புதிய போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட டிரெய்லரும் இணையத்தில் அதிரடி வரவேற்பை குவித்தது.
மேலும், ‘வெரப்பா’ எனும் புதிய பாடல் இன்று வெளியாகும் என இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அறிவித்திருந்தார். இதற்கிடையில், படத்தின் தெலுங்கு பதிப்பான வீரபத்ருடு படத்தின் டிரெய்லரும் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்த நிலையில், ஐதராபாத் நகரில் நடைபெற்ற ‘வீரபத்ருடு’ திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, விஜய் குறித்து உருக்கமான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
அவர் பேசுகையில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை பலர் நம்பவில்லை. அவரைச் சுற்றி எதிர்மறை கருத்துகளும் சந்தேகங்களும் பரவின. ஆனால் அந்த மனிதர் தனது கனவுகளையும் சிந்தனைகளையும் ஒருபோதும் கைவிடவில்லை. தொலைநோக்கு பார்வையுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து பயணித்தார்.
இன்று அவர் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக உயர்ந்திருக்கிறார். மாண்புமிகு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தபோது பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் ‘என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை அவருக்குள் உறுதியாக இருந்தது. அந்த நம்பிக்கையே இன்று கோடிக்கணக்கான மக்களின் ஆதரவாக மாறியுள்ளது.ஒரு மனிதரை மக்கள் முழுமையாக நம்பும் தருணத்தில், அந்த நம்பிக்கையே மிகப்பெரிய சக்தியாக மாறுகிறது” என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
English Summary
crowd refused believe it Vijay showed his talent Director RJ Balaji powerful statement