"மாற்றுக் கட்சியினருக்கு 'சீட், பதவி' இல்லை?" - தவெக-வில் இணைந்த அதிமுக நிர்வாகிகளுக்கு பல்பு..! - Seithipunal
Seithipunal


அடுத்து வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து அதிமுக உள்ளிட்ட மாற்றுத் திராவிடக் கட்சிகளில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த நிர்வாகிகளுக்குத் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ வழங்கப்பட மாட்டாது என்ற புதிய தகவல் தவெக வட்டாரத்தில் பரவி வருவது, கட்சி மாறிய நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எதிர்கால அரசியல் கணக்குகளும் செல்லூர் ராஜூவின் பதிலும்

உள்ளாட்சித் தேர்தல் மற்றும் தங்களது வாரிசுகளின் எதிர்கால அரசியலை மனதில் கொண்டு அதிமுகவின் கோட்டையான மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் தற்பொழுது தவெக-வில் இணைந்து வருகின்றனர். மதுரையில் தவெக-வுக்குத் தாவியவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு மிக நெருக்கமான மாநகர நிர்வாகிகள் ஆவர். இவர்கள் தங்களது அரசியல் நகர்வு குறித்து முன்கூட்டியே பேசிவிட்டே சென்றதால், செல்லூர் ராஜூ அவர்களைத் தடுக்க முயலவில்லை. மாறாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "ஏப்பா, ஏய் எத்தனை கட்சியிலப்பா சேருவீங்க... நான் என்றும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில்தான்" என்று நகைச்சுவையோடு பதிவிட்டிருந்தார்.

முக்கியத்துவமின்மையும் தொண்டர்களின் எதிர்ப்பும்

அதிமுகவில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களாகக் கௌரவமாக வலம் வந்த தங்களுக்கு, தவெக-வில் தற்பொழுது வரை எவ்வித முக்கியத்துவமும் கட்சிப் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என்று கட்சி தாவிய நிர்வாகிகள் தற்பொழுது புலம்பத் தொடங்கியுள்ளனர். தவெக-வின் பழைய நிர்வாகிகள் இவர்களது அரசியல் அனுபவத்திற்கு உரிய மதிப்பளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலில் முழுக்க முழுக்க ஆரம்பத்தில் இருந்தே உழைத்த தவெக-வின் சொந்தக் கட்சியினருக்கு மட்டுமே 'சீட்' வழங்கி அவர்களைக் கவுன்சிலர்களாக்க வேண்டும் என்றும், மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு வேண்டுமானால் கட்சிப் பொறுப்புகளை மட்டும் வழங்கலாம் என்றும் தவெக தலைமை ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதற்கு உதாரணமாக, தவெக அரசுக்கு ஆதரவளித்த அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படாததால் அவர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கமே திரும்பிய நிகழ்வை தவெகவினர் சுட்டிக்காட்டுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்ற இந்தத் தகவலால், மீண்டும் அதிமுகவிற்கும் செல்ல முடியாமல், தவெக-விலும் தொடர முடியாமல் கட்சி மாறிய நிர்வாகிகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK Defectors in TVK Worried Over Rumors of Local Body Election Ticket Denial


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->