"ஆப்பிள் பயனர்களின் பணத்தைச் சேமிக்க புதிய உத்தி" - புதுப்பிக்கப்பட்ட 'மேக் புக் நியோ' லேப்டாப்பை அறிமுகம் செய்தது ஆப்பிள்!
Apple Unveils Refurbished MacBook Neo Starting at 599
சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் (iPhone) சாதனங்களைத் தவிர, மற்ற அனைத்து தயாரிப்புகளின் ஆரம்ப விலையையும் சுமார் 100 டாலர் வரை அண்மையில் உயர்த்தியிருந்தது. இந்த விலை உயர்வு ஆப்பிள் பிரியர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், பயனர்களின் பணத்தைச் சேமிக்கும் வகையில் ஏற்கனவே சந்தையில் அறிமுகமான ‘மேக் புக் நியோ’ (MacBook Neo) லேப்டாப்பை தற்பொழுது புதுப்பித்து (Refurbished) ஆப்பிள் நிறுவனம் மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
விலை மற்றும் சேமிப்பு விவரங்கள்
பயனர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதுப்பிக்கப்பட்ட மேக் புக் நியோ லேப்டாப் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் 256ஜிபி (GB) இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலின் விலை 599 டாலர் எனவும், சற்றே கூடுதல் சேமிப்புத்திறன் கொண்ட 512ஜிபி மாடலின் ஆரம்ப விலை 679 டாலர் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய தயாரிப்புகளின் விலை உயர்ந்துள்ள சூழலில், இந்த புதுப்பிக்கப்பட்ட மாடல்கள் பயனர்களுக்குப் பெரும் பொருளாதாரச் சேமிப்பைத் தரும் என ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது.
உத்தரவாதம் மற்றும் உதிரிபாகங்கள்
இவை புதுப்பிக்கப்பட்ட தயாரிப்புகளாக இருந்தாலும், வழக்கமான ஆப்பிள் தயாரிப்புகளைப் போலவே இதற்கும் முழுமையாக ஓராண்டிற்கான (1 Year) அதிகாரப்பூர்வ உத்தரவாதம் (Warranty) ஆப்பிள் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. மேலும், இந்த லேப்டாப்கள் தரம் மற்றும் பாதுகாப்புத் தன்மைகளை உறுதி செய்வதற்காகப் பல்வேறு கட்ட கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
இந்த மேக் புக் நியோ லேப்டாப் பெட்டியுடன் (Box), பயனர்களுக்கு ஒரு 'USB Type-C' சார்ஜிங் கேபிள் மற்றும் வேகமான சார்ஜிங்கிற்கு ஏதுவாக '20 வாட்ஸ் பவர் அடாப்டர்' (20W Power Adapter) ஆகியவையும் சேர்ந்தே வழங்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
English Summary
Apple Unveils Refurbished MacBook Neo Starting at 599