நடிகர் ரவி மோகனுக்கு பாலக்காட்டில் 'தேவி ரத்னா' விருது வழங்கி கெளரவம்..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகனுக்கு பாலக்காட்டில் பல்லாஸனா பழையகாவு ஸ்ரீமீன்குளத்தி பகவதி அம்மன் கோயிலின், 'தேவி ரத்னா' விருது, வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டில் பல்லாஸனா பழையகாவு ஸ்ரீபகவதி அம்மன் தேவஸ்தானம் நிறுவியுள்ள இந்த தேவி ரத்னா விருது, கலை, கலாசாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாகும்.

அதன்படி, இந்த ஆண்டு, 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு, தமிழ் சினிமாவிற்கான அவரது முக்கியப் பங்களிப்பு மற்றும் ரசிகர்களிடையே பெற்றிருக்கும்  ஆதரவை முன்னிட்டு ரவி மோகன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், இந்த விருதில், ₹1,00,001 பணப் பரிசு, தங்கச் சின்னம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பலகை ஆகியவை இடம் பெற்றுள்ளன. 

இந்தா விருது விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரவி மோகன், விருதை வாங்கிக்கொண்டு, கோயிலின் ஆன்மிகச் சூழல் குறித்தும் பல்லாஸனா பழையகாவு பகவதி அம்மன் தேவஸ்தானம் அமைப்பின் பாரம்பரியப் பெருமை குறித்தும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.முக்கியமாக இந்த விழாவில் ரவி மோகனுடன் கலந்துக்கொண்ட பாடகி கெனீஷா, தன்னுடைய இசை நிகழ்ச்சியையும் நடத்தினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Ravi Mohan Honored with the Devi Ratna Award in Palakkad


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->