மருத்துவமனை மீது தாக்குதல்: காபூலில் 400 பேர் உயிரிழப்பு...! உண்மை என்ன? - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் அமைந்திருந்த பெரிய மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தாலிபான் அரசு வெளியிட்ட தகவலின்படி, சுமார் 2,000 படுக்கைகள் கொண்ட போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை கடுமையாக சேதமடைந்து, இடிபாடுகளில் சிக்கி சுமார் 400 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பாக இருப்பதாக தாலிபான் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்டநாளாக நிலவி வரும் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என தாலிபான் அரசை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், அந்த அமைப்புகளுடன் எவ்வித தொடர்பும் இல்லை என தாலிபான் மறுத்து வருகிறது.இந்த விவகாரம் குறித்து தாலிபான் செய்தித் தொடர்பாளர்கள் கடும் கண்டனம் வெளியிட்டு, “இது மனிதகுலத்துக்கு எதிரான கொடூர குற்றம்” என சாடியுள்ளனர்.

மறுபுறம், பாகிஸ்தான் தரப்பு இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்து, “ராணுவ தளங்கள் மற்றும் வெடிமருந்து சேமிப்பு இடங்களையே குறிவைத்து துல்லியமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன; எந்த மருத்துவமனையும் குறிவைக்கப்படவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “இது கோழைத்தனமான, மனசாட்சியற்ற வன்முறைச் செயல். பொதுமக்கள் உயிரிழந்த இந்த சம்பவத்தை ராணுவ நடவடிக்கையாக சித்தரிக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாது” என இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Attack Hospital 400 Dead Kabul What Truth


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->