அதிவேக விபத்து...! சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் பலி...! - தொழிலதிபர் காவலர்களிடம் சிக்கியது எப்படி...?
High Speed Accident Auto Driver Killed Chennai How Did Businessman Get Caught by Police
சென்னை வடபழனி-நெற்குன்றம் சாலையில் கடந்த 14ஆம் தேதி நடந்த பயங்கர விபத்து, தற்போது பரபரப்பான திருப்பத்தை எடுத்துள்ளது. வழக்கம்போல் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோ மீது அதிவேகமாக வந்த கார் மோதியதும், நின்று உதவாமல் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியது.

இந்த விபத்தில், சாலிகிராமம் சேர்ந்த 58 வயதான ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் தீவிர விசாரணையில் இறங்கினர்.
மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் நடந்த துல்லியமான விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டியவர் சாலிகிராமம் சேர்ந்த 29 வயதான நிஷாந்த் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.
நண்பர்களை கவர்வதற்காக அபாயகரமான முறையில் வேகமாக கார் ஓட்டிய அவர், கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியதாகவும், காயமடைந்தவரின் நிலையை கண்டு பயந்து அங்கிருந்து தப்பியோடியதாகவும் காவலர்களிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நிஷாந்தை காவலர்கள் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் சாதாரண விபத்து அல்ல என்று கருதி, கொலைக்கு நிகரான கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அருண், சென்னை காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “மது அருந்தி அல்லது அலட்சியமாக, அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
High Speed Accident Auto Driver Killed Chennai How Did Businessman Get Caught by Police