அலட்சிய திமுக ஆட்சியினால் பலியான பிஞ்சு உயிர் - நயினார் நாகேந்திரன்!
BJP Nainar Condemn to DMK MK Stalin
பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள கண்டன செய்தியில், "திருச்சி மாவட்டம் கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், நான்கரை வயது சிறுவன் பலியாகியதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
"உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பு" என்று ஐந்தாண்டுகளாக வெற்றுப் பெருமை பேசிவிட்டு, போதிய மருத்துவர்களைக்கூட திமுக அரசு நியமிக்கவே இல்லை என்பதன் சாட்சியே இக்கொடூர சம்பவம். ஆளும் அரசின் நிர்வாகத் திறனின்மையால் வாழ வேண்டிய அப்பாவிக் குழந்தையின் ஆயுள் பறிக்கப்படுவது இனி என்றும் நேரக் கூடாது!
மருத்துவத் துறையைச் சீரழித்து மக்கள் உயிரோடு விளையாடிய திமுக ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Nainar Condemn to DMK MK Stalin