வாக்காளர் அட்டை இல்லையா? கவலை வேண்டாம்...! 12 மாற்று ஆவணங்களுடன் வாக்களிக்கலாம் ...! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) உள்ளவர்கள் அதை கட்டாயமாக வாக்குச்சாவடியில் காட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அந்த அட்டை இல்லாதவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த, மாற்று புகைப்படத்துடன் கூடிய 12 வகை ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்தால் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.

இதில் ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை,தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்,  ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card), இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை, இந்திய கடவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை ஆகியவற்றை வாக்களிக்க பயன்படுத்தலாம்.

மேலும், வாக்காளர்கள் தங்களின் பெயர் மற்றும் வரிசை எண்ணை அறிய, “வாக்காளர் தகவல் சீட்டு” வழங்கப்பட உள்ளது. இதில் வாக்குச்சாவடி விவரம், வாக்குப்பதிவு தேதி மற்றும் நேரம் போன்ற தகவல்கள் இடம்பெறும்.

எனினும், இந்த தகவல் சீட்டு அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.ஒரு வாக்காளரிடம் சரியான அடையாள ஆவணம் இருந்தாலும் மட்டும் போதாது; அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதே முக்கிய நிபந்தனை என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேபோல், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்கள் அசல் கடவுச்சீட்டை மட்டுமே அடையாளமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், அனைத்து வாக்காளர்களும் எந்த தடையும் இல்லாமல் தங்கள் ஜனநாயக உரிமையை பயன்படுத்த வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாக உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont Voter ID No need to worry You vote using 12 alternative documents Election Commission Announcement


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->