பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு கோரிக்கை...! நவம்பர் 3 வரை டைம் கொடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்ட செவிலியர்கள்...!
Nurses call off hunger strike demanding permanent employment and job security They have been given time until November 3rd
பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செவிலியர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம், சுகாதாரத்துறை செயலாளர் அளித்த உறுதியைத் தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் சார்பில், செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.குறிப்பாக, பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.இதற்கிடையே, செவிலியர் சங்க நிர்வாகிகள் சுகாதாரத்துறை செயலாளரை சந்தித்து தங்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த உறுதியைத் தொடர்ந்து, போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பது குறித்து செவிலியர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
சுகாதாரத்துறை செயலாளர் அளித்த உறுதியை ஏற்று, நவம்பர் 3-ந்தேதி வரை காத்திருப்பது என செவிலியர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, தற்போது அறிவிக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நவம்பர் 3-ந்தேதிக்குள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க செவிலியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அளித்த உறுதிமொழிக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படாத பட்சத்தில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Nurses call off hunger strike demanding permanent employment and job security They have been given time until November 3rd