"விசில் சின்ன பொத்தானில் கறுப்பு மை!": மதுராந்தகத்தில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தம் - இயந்திரங்கள் மாற்றப்பட்டு மீண்டும் தொடக்கம்! - Seithipunal
Seithipunal


மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6) காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் மற்றும் சர்ச்சைகள் காரணமாகச் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கியது.

சின்னத்தில் கறுப்பு மை சர்ச்சை: மதுராந்தகம் தண்டரைபுதுச்சேரி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில், ஆளும் தவெகவின் 'விசில்' சின்னத்திற்கு நேராக இருந்த பொத்தானில் கறுப்பு மை வைக்கப்பட்டிருந்ததாக வாக்காளர்கள் புகார் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு நிறுத்தம் & இயந்திரம் மாற்றம்: இதனால் வாக்குச்சாவடியில் சலசலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த இயந்திரத்திற்குப் பதிலாக வேறு புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

மற்றொரு வாக்குச்சாவடியில் பழுது: இதேபோன்று மதுராந்தகம் புக்கதுறை வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதடைந்ததால் சுமார் 15 நிமிடங்கள் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் இயந்திரம் சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவு தடையின்றித் தொடர்ந்தது.

தொகுதி & வாக்காளர்கள் விவரம்: மதுராந்தகம் தொகுதியில் 1,04,926 ஆண்கள், 1,08,797 பெண்கள், 65 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் உள்ளனர். வாக்களிப்பதற்காக மொத்தம் 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ. பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், சிபிஐ(எம்) சார்பில் பி. சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன் உட்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EVM Issues Cause Temporary Halt in Madurantakam By-Election Voting Resumes After Machine Replacement


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->