"மதுராந்தகம், தாராபுரம் & தட்டாஞ்சாவடி தொகுதிகள்": பரபரப்பான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையின் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதி ஆகியவற்றுக்கு இன்று (அக்டோபர் 6) காலை 7 மணி முதல் விறுவிறுப்பான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இடைத்தேர்தல் பின்னணி: அதிமுகவில் இருந்து விலகித் தவெகவில் இணைந்த எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா மற்றும் முதல்வர் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியைத் துறந்தது ஆகியவற்றால் காலியான 7 தொகுதிகளில், 5 தொகுதிகளின் தேர்தலுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

களத்தில் முக்கிய வேட்பாளர்கள் (5 முனைப் போட்டி):

மதுராந்தகம்: தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், திமுகவின் பரந்தாமன், அதிமுகவின் கணிதா சம்பத், சிபிஐ(எம்) கட்சியின் சுகந்தி, நாம் தமிழர் கட்சியின் ஜானகிராமன் உட்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தாராபுரம்: தவெக வேட்பாளர் சத்தியபாமா, திமுகவின் சுகன்யா, அதிமுகவின் பானுமதி, சிபிஐ கட்சியின் லட்சுமணன், நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா உட்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலையொட்டி இரு தொகுதிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இன்று பதிவாகும் வாக்குகள் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

By-Elections Begin in TN's Madurantakam & Dharapuram and Puducherry Thattanchavady


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->