முன்விரோதத்தால் நேர்ந்த விபரீதம்...! 55 வயது நபரை அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை...! - தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக 55 வயது நபரை தாக்கி கொலை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாளையங்கோட்டை சாலை பகுதியில் உள்ள ஒரு பூங்கா வாசல் அருகே கடந்த 2020-ம் ஆண்டு இந்த கொலை சம்பவம் நடைபெற்றது.

மகிழ்ச்சிபுரம் பகுதியை சேர்ந்த ஆவுடையப்பன் மகன் நமச்சிவாயராஜ் (55) என்பவருக்கும், தூத்துக்குடி மணிநகரை சேர்ந்த முத்துராஜ் மகன் ஆல்பர்ட் சந்திரபோஸ் (51) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஆல்பர்ட் சந்திரபோஸ், நமச்சிவாயராஜை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆல்பர்ட் சந்திரபோசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றம்-1-ல் நடைபெற்று வந்தது. வழக்கில் காவலர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம் நேற்று 5-ந்தேதி தீர்ப்பு வழங்கினார்.

அதில், ஆல்பர்ட் சந்திரபோஸ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த கொலை வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், குற்றவாளிக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tragedy caused by previous enmity Life imprisonment beating and killing 55 year old man Thoothukudi court delivers dramatic verdict


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->