அர்ஜென்டினா ஜெர்சியில் லியோனல் மெஸ்ஸியின் கடைசி போட்டி நாளை.. பிரியாவிடை தருணத்தை நேரில் பார்ப்பது எப்படி..?
Lionel Messis final match in the Argentina jersey
கால்பந்து உலகில் தன்னுடைய நுணுக்கமான மின்னல்வேக காலசைவுகளில் மாயாஜால வித்தைக்காரர் லியோனல் மெஸ்ஸி. ரசிகர்களால் goat என்று அழைக்கப்படுபவர். 2026 கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயினிடம் தோற்றதற்கு பின்னர், சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த ஒட்டுமொத்த மெஸ்ஸி ரசிகர்களின் இதயத்தை நொறுக்கியது.
ஆர்ஜென்டீனா அணியின் ஜாம்பவான் மாரடோனாவின் லெகஸியை கடந்த 20 ஆண்டுகளாக தோளில் சுமந்தவர் மெஸ்ஸி. தற்போது தென் அமெரிக்க சாம்பியன்களுக்கு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், 85000 ரசிகர்கள், சக கால்பந்து வீரர்கள் மற்றும் முன்பு சேர்ந்து பயணித்த வீரர்கள் என அனைவரின் முன்னிலையிலும் பிரியாவிடை போட்டியில் நாளை விளையாடவுள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் பெனினுக்கு எதிரான தனது பிரியாவிடை நட்புப் போட்டியுடன், தனது தேசிய அணியான அர்ஜென்டினா ஜெர்சிக்கு ஓய்வு கொடுக்கிறார். இதுவே அவர் தேசிய அணியான அர்ஜெண்டினாவுக்கு விளையாடும் கடைசி போட்டி மற்றும் கேப்டனாக வழிநடத்தும் கடைசி போட்டியாகும்.
ஒரு உலகக் கோப்பை சாம்பியன், இரண்டு கோபா அமெரிக்கா பட்டங்கள் மற்றும் ஃபைனலிசிமா ஆகியவற்றை வென்று உச்சபட்ச நட்சத்திர கால்பந்து வீரராக திகழும் மாபெரும் வீரன்.
இந்த அசாத்திய வீரனுக்கு, இந்தப் நட்புப் போட்டி ஒரு அடையாளப்பூர்வமான பொறுப்பு ஒப்படைப்பாக அமைகிறது. முக்கியமாக மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்றவர் மற்றும் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையுடன் விடைபெறுகிறார். இதுவரை அவர், 207 ஆட்டங்களில் 125 கோல்களையும், 68 கோல் வாய்ப்புகளையும் வழங்கியுள்ளார்.

லயோனல் மெஸ்ஸி தனது கடைசி போட்டியாக, அக்டோபர் 06ஆம் தேதி அன்று விளையாடுவார். இந்த இந்திய நேரப்படி புதன்கிழமை, அக்டோபர் 07ஆம் தேதி அதிகாலை 04.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மூன்று முறை ஃபிஃபா உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி, உலகத் தரவரிசையில் 93-வது இடத்தில் உள்ள பெனின் அணியை எதிர்கொள்கிறது. மெஸ்ஸியின் இந்த கடைசி சர்வதேசப் போட்டி, பியூனஸ் அயர்ஸில் உள்ள எஸ்டாடியோ மாஸ் மானுமென்டல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மெஸ்ஸி விளையாடும் கடைசி சர்வதேசப் போட்டி, ஒரு FIFA சர்வதேச நட்புப் போட்டி என்பதால் இந்தியாவில் நேரலையாக ஒளிபரப்பப்படாது. ஆனாலும், இந்தியாவில் ZEE5-இல் ஆன்லைனில் பார்க்கலாம்.
English Summary
Lionel Messis final match in the Argentina jersey