புகார் அளித்தவர் மீது, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்கு; கோயம்பேடு துணை போலீஸ் ஆணையர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ள 1,800 சதுர அடி நிலத்துக்கு போலி ஆவணங்களைத் தயாரித்ததாக எஸ்.சூர்யா என்பவர், வடபழனியைச் சேர்ந்த பால்துரை உள்ளிட்ட மூன்று பேர் மீது புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி பால்துரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ரமேஷ், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய விருகம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பால்துரைக்கு எதிரான புகாரைத் திரும்பப் பெறக் கூறி ஆய்வாளர் சூர்யாவை மிரட்டியதாகவும், அதற்கு அவர் சம்மதிக்காததால் பால்துரையின் மனைவி சூரிய மீது, அளித்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் இந்தச் செயலுக்குக் நீதிபதி என்.ரமேஷ், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், உயர் நீதிமன்ற உத்தரவில் உடன்பாடு இல்லை என்றால் மேல்முறையீடு செய்ய வேண்டுமே தவிர, புகார்தாரரை மிரட்டுவதும், பொய் வழக்குப்பதிவு செய்வதும் சட்டத்திற்கும் நீதிமன்றத்திற்கும் விடப்படும் சவாலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது போன்ற நடவடிக்கைகள் நீதி நிர்வாகத்தின் அடிவேரையே ஆட்டும் செயல் எனக் கூறிய நீதிபதி, சூர்யா மீதான வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் கோயம்பேடு துணை போலீஸ் ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

High Court orders Koyambedu Deputy Commissioner of Police to appear in person regarding the issue of a false case filed against the complainant


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->