அம்பத்தூர் அருகே அதிர்ச்சி; கட்டிட பணியின்போது மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பலி: ஒருவர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


அம்பத்தூர் அருகே மேனாம்பேடு, இந்திரா காந்தி நகர் 05வது தெருவில் ஒரு புதிய கட்டுமானப் பணிகளில் கூலித் தொழிலாளிகளாக மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் துலால் (40), சலீம் (30). ஆகிய இருவரும் வேலைபார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்று மாலை அக்கட்டிடத்தில் சாரம் கட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது இவர்களின் மீது அக்கட்டிடத்தின் அருகே இருந்த உயர் அழுத்த மின்கம்பி உரசியதில்,  துலால், சலீம் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இதில், சம்பவ இடத்திலேயே துலால் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய சலீமை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

worker died of electrocution and another was critically injured during construction work near Ambattu


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->