டிஎம்சி-இல் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை கோயல் மாலிக்; மாநிலங்களவை தேர்தலில் போட்டி..! - Seithipunal
Seithipunal


புகழ்பெற்ற வங்க நடிகர் ரஞ்சித் மாலிக்கின் மகள் கோயல் (ருக்மினி) மாலிக். திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் (டிஎம்சி) சார்பில், கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார். நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் டிஎம்சி படுதோல்வி அடைந்தது. பாஜக முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது. டிஎம்சி தோல்வி அடைந்ததை அடுத்து, கோயல் (ருக்மினி) மாலிக் தனது பதவியை ராஜினாமா செய்து, அக்கட்சியில் இருந்தும் விலகினார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயல் மாலிக், பாஜகவில் முறைப்படி இணைந்துள்ளார். அவரை கட்சியின் பொதுச் செயலாளர் சஷி அக்னிஹோத்ரி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதையடுத்து, சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் அலுவலகம் சென்ற அவர், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் சுவேந்து அதிகாரி, மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இது குறித்து பாஜக மாநில தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கோயல் மாலிக், ''மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய பிரதமர் மோடி, முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு நன்றி. மக்களின் நலனுக்காக பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவது எனக்குப் பெருமை சேர்க்கும் விஷயம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

வரும்  அக்டோபர் 16- இல், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கத்தில் உள்ள 12 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, மேற்கு வங்கத்தில் காலியாகவு ள்ள இடத்துக்கு நடிகை கோயல் மாலிக் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Koyel Mallick who joined the BJP to contest the Rajya Sabha election


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->