"மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம் & பட்டுப் புடவை": 'அண்ணன் சீர் திட்டத்திற்கு' ₹812 கோடி நிதி ஒதுக்கித் தமிழக அரசு அரசாணை வெளியீடு!
TN Govt Sanctions 812 Crore for Annan Seer Thittam To Provide 8g Gold Coin Silk Saree to Brides
தமிழ்நாட்டில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்தைச் செயல்படுத்த நிர்வாக அனுமதி அளித்து, முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திட்டத்தின் பயன்கள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுடைய மணப்பெண்களுக்கு 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் அரசின் சார்பில் 'அண்ணன் சீர்' பரிசாக வழங்கப்படும்.
வருமான வரம்பு தகுதி: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இத்திட்டம் பொருந்தும்.
ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு: 2026-27 ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தினை முதற்கட்டமாகச் செயல்படுத்துவதற்காக ரூ.812 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைபெறும் திருமணங்களுக்கு இத்திட்டம் பொருந்தும் என்றும், பிரத்யேக இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் நடைமுறை: தமிழ்நாடு திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரர் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை கொள்முதல் செய்யப்படும். தங்கத்தின் விலை IBJA (India Bullion and Jewellers Association) அமைப்பால் நிர்ணயிக்கப்படும் விலையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
English Summary
TN Govt Sanctions 812 Crore for Annan Seer Thittam To Provide 8g Gold Coin Silk Saree to Brides