தேர்தல் ஆணையத்தை நோக்கி நாளை இண்டியா கூட்டணி பேரணியில் ஆம் ஆத்மி பங்கேற்காது; எம்.பி சஞ்சய் சிங்..!
Aam Aadmi Party will not participate in the INDIA blocs rally towards the Election Commission
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, நாளை (அக்.06) இண்டியா கூட்டணி கட்சியினர், தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி செல்லவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த பேரணியில் ஆம் ஆத்மி பங்கேற்காது என்று அக்கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாக எதிர்க்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து எம்.பி சஞ்சய் சிங் கூறியுள்ளதாவது;
எங்கள் கட்சி சார்பில் அன்றாடமும் ஜந்தர் மந்தர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகிறதாகவும், இந்த போராட்டத்தில் நாங்கள் எங்களது கட்சியின் பெயர் கொண்ட பதாகையை கூட பயன்படுத்துவது இல்லை. ஏனெனில், இது மக்கள் இயக்கம் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது தேசத்தின் குடிமக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை. அதனால் இதில் எல்லோரும் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தை நோக்கி நாளை பேரணி செல்ல இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் ஆம் ஆத்மி இல்லை. இந்த விவகாரத்தில் எங்கள் வழியில் நாங்கள் போராடி வருகிறோம். அதனால் அந்த பேரணியில் நாங்கள் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளார்.
English Summary
Aam Aadmi Party will not participate in the INDIA blocs rally towards the Election Commission