சென்னை போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது; தமிழக அரசு கைது செய்திருப்பது சரியான அணுகுமுறை அல்ல; இந்திய கம்யூனிஸ்ட்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியு ள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

''சென்னையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுகின்ற செவிலியர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது சரியான அணுகுமுறை அல்ல.

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து செவிலியர் சங்க நிர்வாகிகளையும், செவிலியர்களையும் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். செவிலியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Communist Party of India opposes the arrest of nurses who participated in the protest in Chennai


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->