மாநிலங்களவை தேர்தல் நேரத்தில் மாஸ் என்ட்ரி...! பாஜகவில் சேர்ந்த ரஞ்சித் மல்லிக்கின் மகள் ருக்மினி...! - Seithipunal
Seithipunal


மேற்குவங்காள அரசியலில் புதிய திருப்பமாக, பிரபல நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ருக்மினி மல்லிக் இன்று பாஜகவில் இணைந்தார். மாநிலங்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவரது அரசியல் பயணம் தற்போது புதிய பாதையை நோக்கி திரும்பியுள்ளது.

மேற்குவங்காளத்தை சேர்ந்த ருக்மினி மல்லிக், பழம்பெரும் வங்காள நடிகர் ரஞ்சித் மல்லிக்கின் மகள் ஆவார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்த இவர், சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்ததை தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், ருக்மினி மல்லிக் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதையடுத்து மேற்குவங்காள அரசியல் களத்தில் அவரது அடுத்தகட்ட நகர்வு கவனம் பெற்றுள்ளது.மேலும், பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ருக்மினி மல்லிக் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 12 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ள நிலையில், அவற்றுக்கான தேர்தல் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது.

இதில் மேற்குவங்காளத்தில் பாஜக சார்பில் களமிறங்கும் ருக்மினி மல்லிக் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படத்துறையில் பிரபலமான முகமாக அறியப்பட்ட ருக்மினி மல்லிக், தற்போது அரசியலிலும் புதிய பொறுப்பை நோக்கி நகர்ந்திருப்பது மேற்குவங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mass entry during Rajya Sabha elections Ranjit Mallick daughter Rukmini joins BJP


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->