"கச்சத்தீவு விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!": வழக்கு விசாரணை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைப்பு!
Supreme Court Adjourns Katchatheevu Hearing to Feb 2027 Directs Centre to Protect TN Fishermen
கச்சத்தீவை மீட்கக் கோரி அதிமுக, திமுக மற்றும் மீனவர் அமைப்புகள் தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.
தமிழக அரசு & திமுக வாதம்: கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை இருந்தும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசு வழக்கறிஞர் ஹரிப்பிரியாவும், இலங்கை அரசுடன் தூதரக ரீதியாகப் பேசித் தீர்வு காண வேண்டும் எனத் திமுக சார்பிலான மூத்த வழக்கறிஞர் பி. வில்சனும் வலியுறுத்தினர்.
மத்திய அரசு பதில்: கச்சத்தீவு விவகாரம் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான ராஜாங்க ரீதியிலான தூதரக விவகாரம் என்பதால், இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் அறிவுறுத்தல்: கச்சத்தீவு இரு நாடுகளின் ராஜாங்க ரீதியிலான விவகாரம் என்ற போதிலும், இந்திய மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு: அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அமர்வு, வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது.
English Summary
Supreme Court Adjourns Katchatheevu Hearing to Feb 2027 Directs Centre to Protect TN Fishermen