நீலகிரியில் பரபரப்பு..! பேருந்தை 'ஹைஜாக்' செய்த குரங்குப் படை! கதறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்...! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்குள் திடீரென குரங்குகள் கூட்டமாக புகுந்து அங்கிருந்த பயணிகளை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழகம்–கேரள எல்லையை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள பாட்டவயல் கிராமம் வழியாக கேரள மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடலூர் வழியாக கேரளாவுக்கு செல்லும் பெரும்பாலான வாகனங்களும் பாட்டவயல் வழித்தடத்தையே பயன்படுத்துகின்றன.

இந்த நிலையில், சுல்தான்பத்தேரியில் இருந்து பாட்டவயல் நோக்கி வந்த கேரள அரசு பேருந்து, பயணிகளை ஏற்றுவதற்காக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் அருகில் உள்ள கடைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்துக்குள் பெண் உள்பட 2 பயணிகள் அமர்ந்திருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக வனப்பகுதியில் இருந்து குரங்குகள் கூட்டமாக பேருந்துக்குள் புகுந்தன. பயணிகள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் பேருந்துக்குள் தாவி வந்த குரங்குகள், இருக்கைகளுக்கு இடையே அங்கும் இங்குமாக ஓடி விளையாடி அட்டகாசம் செய்தன.சிறிது நேரத்தில் அவற்றின் அட்டகாசம் எல்லை மீறியது.

பேருந்துக்குள் இருந்த பயணிகளை குரங்குகள் சீண்டத் தொடங்கியதால், அச்சமடைந்த அவர்கள் உடனடியாக பேருந்தில் இருந்து வெளியேற முயன்றனர்.குரங்குகள் கூட்டமாக அவர்களை நோக்கி துரத்தி வந்ததால், பயணிகள் பதற்றமடைந்து கூச்சலிட்டனர். பேருந்துக்குள் ஏற்பட்ட இந்த திடீர் குழப்பத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதற்கிடையே பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் அங்கிருந்த சிலர் மரக்குச்சிகளுடன் விரைந்து வந்து குரங்குகளை விரட்ட முயன்றனர். அவர்களையும் குரங்குகள் சீண்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், தொடர்ந்து முயற்சி மேற்கொண்ட அவர்கள் குரங்குகளை பேருந்தில் இருந்து வெளியேற்றினர்.

மனிதர்களின் தொடர் விரட்டலால் குரங்குகள் அங்கிருந்து ஓடி அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. இதையடுத்து பேருந்துக்குள் இருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர்.பின்னர் ஓட்டுநரும் நடத்துநரும் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டு வழக்கம்போல் சுல்தான்பத்தேரி நோக்கி புறப்பட்டுச் சென்றனர். வனப்பகுதியையொட்டிய பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There commotion Nilgiris group monkeys hijacked bus Passengers ran away screaming


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->