தமிழக, புதுச்சேரி இடைத்தேர்தல்; மாலை 5 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 83.86%, தாராபுரத்தில் 78.53% வாக்குப் பதிவு; தட்டாஞ்சாவடியில் 78.83% வாக்குப்பதிவு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகு​தி​களில் இடைத்​தேர்​தலுக்கான அட்டவணையை கடந்த மாதம் 07-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி இன்று (அக்.6) இடைத்தேர்தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 07 மணி தொடங்கியது. இந்நிலையில் மாலை 05 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 83.86%, தாராபுரத்தில் 78.53% வாக்குப்பதிவாகி உள்ளது.

வாக்குப்பதிவு மாலை 06 மணி வரை நடை​ப்பெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்​கு​கள் வரும் 09-ஆம் தேதி எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்படவுள்ளன.

மது​ராந்​தகம் தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் ​(தவெக), பரந்தாமன் (தி​முக), கணிதா சம்​பத் ​(அ​தி​முக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகி​ரா​மன் (நாம் தமி​ழர்) மற்​றும் சுயேட்​சை​கள் உட்பட 27 பேர் களத்​தில் உள்​ளனர்.

தாராபுரம் தொகு​தி​யில் சத்​ய​பா​மா (தவெக), சுகன்யா(​தி​முக), பானு​ம​தி (அ​தி​முக), லட்​சுமணன் (சிபிஐ), கார்த்திகா (​நாதக) உட்பட 22 பேர் போட்​டி​யிடு​கின்றனர்.

தட்டாஞ்சாவடி வாக்குப்பதிவு நிலவரம்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மங்கலம், தட்டாஞ்சாவடி என இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். காலை 07 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 06 மணியுடன் நிறைவடைந்தது.

தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் 06 பேரும், சுயேச்சைகளாக 05 பேரும் மொத்தமாக 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம், திமுக வேட்பாளர் சேதுசெல்வம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.மு.சலீம் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், தட்டாஞ்சாவடியில் மாலை 05 மணி நிலவரப்படி 78.83% வாக்குப்பதிவாகியுள்ளது.

மொத்தமுள்ள 31 வாக்குச்சாவடிகளில் கவுண்டம்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி பூத், வினோபாநகர் பொய்யாகுளம் கம்யூனிட்டி ஹால் அரங்கு ஆகிய பூத்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டன. அதனால், இங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க நிலவரம்:

மேற்கு வங்கத்தில் ரெஜிநகர் சட்டப்பேரவை தொகுதி நடந்த இடைத்தேர்தல் வாக்குபதிவின் படி, மாலை 5 மணி நிலவரப்படி, 78.42%, நந்திகிராம் தொகுதியில் 79.39% வாக்குப்பதிவாகியுள்ளது.

அசாம் மாநிலம் நிலவரம்:

அசாம் மாநிலம் நாகோன் மக்களவை தொகுயில் மாலை 05 மணி நிலவரப்படி, 76.00%, நந்திகிராம் தொகுதியில் 70.25% வாக்குப்பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Voter turnout in Tamil Nadu and Puducherry byelections as of 5 PM


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->