ஜெம் வீரமணி விவகாரத்தில் மான நஷ்டஈடு கோரிய திமுக வழக்கு தொடர அனுமதி அளித்த உத்தரவு; அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மேல்முறையீடு..!
Ministers Nirmal Kumar and Aadhav Arjuna appeal against the order granting permission for the DMK to file a case
பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 'ஜெம்' வீரமணி வழக்கு தொடர்பாக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து, அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் ஜி.கே.முத்துகுமார் அமர்வில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் முறையீடு செய்துள்ளார்.
அப்போது நீதிபதிகள், அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமென்றால் முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கயிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு நோட்டீஸ் வழங்காமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று குறிப்பிட்டு, வழக்கை எண்ணிட வேண்டாம் என பதிவுத்துறைக்கு உத்தரவிடுவதாக தெரிவித்தனர்.
இந்த வழக்கில் துரைமுருகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, அதுவரை அந்த மனுவை எண்ணிடும்படி பதிவுத் துறைக்கு வலியுறுத்த மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அந்த உத்தரவாத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மேல்முறையீடு வழக்கை அக்டோபர் 13-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Ministers Nirmal Kumar and Aadhav Arjuna appeal against the order granting permission for the DMK to file a case