டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகள் இன்று வெளியீடு..!
Tentative answer keys for the TNPSC Group 1 exam to be released today
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு இன்று (அக்.06) செவ்வாய்க்கிழமை வெளியானது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், துணை ஆட்சியர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட 46 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தோ்வு மாநிலம் முழுவதும் (செப். 27) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதினர்.
இதையடுத்து உத்தேச விடைக் குறிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வெழுதியவர்கள் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று விடைக் குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் மற்றும் கருத்துகள் ஆகியவற்றை இணைய வழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் வரும் அக். 13 மாலை 05.45 வரை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
English Summary
Tentative answer keys for the TNPSC Group 1 exam to be released today