'லஞ்சத்துக்கு நேரடி சாட்சி' என சட்டப்பேரவையில் பேசிய விவகாரம்; நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு..! - Seithipunal
Seithipunal


பள்ளிகளுக்கு அனுமதி பெற கடந்த திமுக ஆட்சியில் லஞ்சம் பெறப்பட்டதாகவும், அதற்கு தானே நேரடி சாட்சி என நிதியமைச்சர் மரிய வில்சன் கடந்த 24-ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசியிருந்தார். அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது.

இந்நிலையில், திமுக ஆட்சியில் லஞ்சம் கொடுத்ததாக அமைச்சர் மரிய வில்சன் பேசியது தொடர்பாக, மரிய வில்சனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் கே.சிவசுப்பிரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''லஞ்சம் வாங்குவது மட்டுமல்லாமல், கொடுப்பதும் குற்றம் என்பதால், லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி புகார் அளித்தேன்.

சட்டமன்றத்தில் அமைச்சரின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வெறும் அரசியல் பேச்சாக புறந்தள்ளிவிட முடியாது. சட்டமன்றத்தில் உறுப்பினர் பேசும் பேச்சு தொடர்பாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என்ற சட்டப் பாதுகாப்பு என்பது, சட்டமன்றத்துக்கு வெளியில் நடந்த இந்த நிகழ்வுக்கு பொருந்தாது.

எனது புகாரின் அடிப்படையில், அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.''என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Case filed in High Court against Finance Minister Maria Wilson


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->