தேர்தல் ஆணையம் நோக்கிய பேரணி; ராகுல் காந்தி, பிரியங்கா, உள்ளிட்ட இண்டியா கூட்டணியினர் கைது; பரபரப்பில் தலைநகர் டெல்லி..!
Rahul Gandhi and Priyanka and other members of the INDIA alliance arrested in Delhi
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகலை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, இண்டியா கூட்டணி கட்சிகளின் எம்.பி-க்கள் மற்றும் தலைவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆகாசவாணி வளாகத்துக்குள் இண்டியா கூட்டணி கட்சியினர் இன்று (செவ்வாய்க்கிழமை) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, தலைமை தேர்தல் ஞானேஷ் குமாரை சந்திக்க வேண்டுமென விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்த நிலையில், அந்த சந்திப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதையடுத்து தங்களது போராட்டம் தொடரும் என ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும், ஆகாசவாணி வளாகத்துக்குள் போராடுவது போலீஸாருக்கு சிக்கல் என்றால் வேறு இடத்தில் போராட அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

காவல் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அது பலன் அளிக்காத நிலையில், சுமார் 08 மணி அளவில் ஆகாசவாணி வளாகத்தில் இருந்து ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி-க்கள் மற்றும் இண்டியா கூட்டணி கட்சியினரை வெளியேற்றினர்.
அதற்கு ராகுல் மறுப்பு தெரிவிக்க வலுக்கட்டாயமாக வெளியேற்றி வேனில் ஏற்றினர். அவருடன் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தியும் இருந்தார். மற்றொரு வாகனத்தில் மற்ற கட்சிகளின் எம்.பி-க்கள் மற்றும் தலைவர்கள் ஏற்றப்பட்டனர். அவர்களுடன் கே.சி.வேணுகோபால், அம்ரிந்தர் சிங், பவன் கெரா, தீபேந்தர் ஹூடா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்திக்க 300-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் விரும்புவதாகவும், ஆனால் தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவித்த ராகுல் காந்தி, மக்களை பிரதிநிதித்தவப்படுத்தும் எம்பிக்களை தேர்தல் ஆணையம் சந்திக்கவில்லை என்றால், ஜனநாயகத்துக்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார். இருப்பினும் இந்த சந்திப்பு தொடர்பாக தங்களை எந்த கட்சியும் தொடர்பு கொள்ளவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
English Summary
Rahul Gandhi and Priyanka and other members of the INDIA alliance arrested in Delhi